நாகர்கோவிலில் அதிகாரிகள் திடீர் சோதனை: குடோனில் பதுக்கிய 1½ டன் பாலித்தீன் பைகள் பறிமுதல்
நாகர்கோவில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் குடோனில் பதுக்கி வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 1½ டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கடைகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நகர்நல அதிகாரிகள் பகவதிபெருமாள், தியாகராஜன், மாதேவன்பிள்ளை ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள ஏராளமான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கோட்டார் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாம்சன் மற்றும் போலீசாரும் உடன் சென்றனர்.
பாலித்தீன் பைகள் பறிமுதல்
கோட்டார் கேப் ரோட்டில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அப்பகுதியில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் ஏராளமானவை இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அந்த குடோனுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சுமார் 1½ டன் எடை கொண்ட பாலித்தீன் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவை அனைத்து விற்பனைக்காக வைத்திருந்ததாக தெரிகிறது.
அதன் பிறகு பாலித்தீன் பைகள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது குடோன் உரிமையாளர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட் டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து குடோன் உரிமையாளரை போலீசார் கண்டித்தனர். அதன்பிறகு அங்கு ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை இனி விற்பனை செய்ய கூடாது என்று குடோன் உரிமையாளரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story