காபி பிரியர்களுக்கு கலக்கல் செய்தி!
காலையில் ஆவி பறக்க காபி அருந்துவது பலருக்கு அலாதி விருப்பம். காபியின்றி ஒருநாளைக்கூட அவர்களால் கற்பனை செய்ய முடியாது.
காபி உடம்புக்குள்ளே போனாலே ஓர் உற்சாகம் புகுந்துவிடுவதாக காபி பிரியர்கள் கருதுகிறார்கள். மணக்க மணக்க காபி அருந்தும் காபி பிரியர்களே, உங்களுக்கு இனிக்க இனிக்க சில செய்திகளைச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அவை...
கல்லீரலைக் காக்கும்: சமீபத்திய ஓர் ஆய்வின்படி, தினமும் 2 கோப்பை காபி அருந்துவதால் ‘லிவர் சிரோசிஸ்’ எனப்படும் கல்லீரல் அழற்சி அபாயம் 43 சத வீதம் வரை குறைகிறது.
நீரிழிவு அபாயம் குறையும்: தினமும் சுமார் 6 கோப்பை காபி அருந்துபவர்களுக்கு ‘டைப் 2’ நீரிழிவு நோய் அபாயம் 22 சதவீதம் குறைகிறதாம்.
இதயத்துக்குக் கவசமாகும்: சுமார் 200 ஆய்வுகளை ஆராய்ந்து வெளியிடப்பட்ட முடிவின்படி, தினமும் 3 முதல் 4 கோப்பை காபி அருந்துபவர்களுக்கு இதயநோய்கள் ஏற்படும் வாய்ப்பு 19 சதவீதம் குறைகிறது.
புற்றுநோயைத் தடுக்கும்: தொடர்ந்து காபி அருந்துவது, பெருங்குடல், தொண்டை, கல்லீரல், கருப்பை மற்றும் விதைப்பை (புரோஸ்டேட்) புற்றுநோய் அபாயங்களைக் குறைக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நினைவிழப்புக்கு அணைபோடும்: காபி அருந்துவது, மூளை ஆரோக்கியம் இரண்டுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, அன்றாடம் காபி அருந்துவோர் அல்சைமர், டிமென்சியா போன்ற ஞாபக மறதி வியாதிகளில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு 16 சதவீதம் உள்ளது.
மனஅழுத்தம் போக்கும்: ஐம்பதாயிரம் பெண்களிடம் ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, வாரம் ஒரு கோப்பை காபி அருந்தினாலே, மன அழுத்த அபாயம் 15 சதவீதம் குறைகிறதாம். மற்றொரு ஆய்வு கூறும் வித்தியாசமான தகவல், காபி அருந்துவோர் தற்கொலையால் மடியும் அபாயம் 45 சதவீதம் குறைவு.
என்ன காபி நேசர்களே, இனிமேல், ‘என்ன எப்போதும் காபி கோப்பையும் கையுமாக இருக்கிறாய்?’ என்று யாரும் உங்களைப் பார்த்துக் கூற முடியாது அல்லவா?

Related Tags :
Next Story