‘மனித நூலகம்’ என்ற புதுமை முயற்சி!
‘மனித நூலகம்’ என்ற புதுமை முயற்சியை ஐதராபாத் இளைஞர் ஹர்ஷத் திங்கர் பாட் தொடங்கியிருக்கிறார்.
புத்தகங்கள் நிறைந்த நூலகம் பற்றித் தெரியும், அதென்ன மனித நூலகம் என்று கேட்கிறீர்களா?
பல்வேறுபட்ட மனிதர்களிடம் அவர் களின் அனுபவங்களைக் கேட்டு அறி வதுதான் ‘மனித நூலகம்’. இங்கு, நட மாடும் மனிதர்களே நூலகங்கள், அவர் களின் அனுபவங்கள், கூறும் விஷயங் களே தகவல்கள், அவற்றை நேரில் கேட்டு அறிபவர்களே வாசகர்கள்.
இணையத்தில் உலாவிக் கொண்டி ருந்தபோது யதேச்சையாக இந்த மனித நூலக யோசனையைப் பற்றி அறிந் திருக்கிறார், ஹர்ஷத்.
டென்மார்க் கோபன்ஹேகனைச் சேர்ந்த ரோன்னி அபர்ஜெல் என்பவரால் கடந்த 2000-ம் ஆண்டே இந்த ஐடியா நடை முறைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. சமூகம் சார்ந்த நமது முன்முடிவுகளை மாற்றுவதே இதன் நோக்கம்.
இந்த மனித நூலகத்தில், ‘மனித நூல்களை’ இரவல் பெறலாம், அவர்களின் அனுபவங்களை ‘வாசித்து’ அதாவது, கேட்டு அறியலாம்.
ஹர்ஷத் தனது முதல் மனித நூலக நிகழ்வை கடந்த மார்ச்சில் ஏற்பாடு செய்தார். அங்கு மனித நூல்களாக வந்திருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு இடப்பட்டிருந்தது. உதாரணமாக, ‘திரு மணமாகாத 37 வயது நபராக இருப்பது’, ‘கைவிடப்பட்ட நாடோடி’ ... இவை, இரு மனித நூல்களின் தலைப்புகள்.
‘நாடோடி’ தலைப்பில் வந்திருந்த வலைத்தள எழுத்தாளர் ஷாகுன் செகன், தனது தாடி, உடம்பெங்கும் பச்சை குத்தப்பட்ட உருவங்கள், அதுகுறித்த மக்களின் எண்ணங்கள் பற்றி, ‘வாசகர்கள்’ ரசிக்க ரசிக்க விவரித்துச் சொன்னார்.
மற்றொரு மனித நூல், ஓர் உளவியல் ஆலோசகர். அவர் தானே மனஅழுத்தத்துடன் எப்படிப் போராடி வென்றேன் என்று எடுத்துச் சொன்னார். கற்றல் குறைபாட்டுத் திறன் உடைய ஒரு பெண் தான் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்துக் கூறினார். ஒவ்வொரு ‘மனித நூலின்’ அனுபவத்தையும் ஒரே ஒருவர் அல்லது சிலர் அமர்ந்து சுவாரசியமாகக் கேட்டனர்.
“இந்த மனித நூலக முயற்சிக்குப் பின் உள்ள நோக்கம், மக்களின் சிந்தனையை மாற்றுவதல்ல, மாறாக அவர்கள் உடும்புப்பிடியாய் கொண்டுள்ள கருத்துகள் குறித்து யோசிக்கச் செய்வதுதான்” என்கிறார் ஹர்ஷத்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து ஹர்ஷத் கொண்டிருந்த தவறான எண்ணம், ஓரினச்சேர்க்கையாளர் ஒருவருடன் ரெயிலில் அவர் நடத்திய ஆழமான உரையாடலுக்குப் பின் அடியோடு மாறிவிட்டதாம். அதுபோன்ற அனுபவங்கள்தான் தன்னை தொடர்ந்து மனித நூலகத்தை நடத்த ஊக்குவிப்பதாக ஹர்ஷத் சொல்கிறார்.
தற்போது இவரது மனித நூலக அமர்வுகளுக்கு 300 முதல் 600 பேர் வரை வரு கிறார்கள். ஒரு மனித நூலுடனான அமர்வு, சுமார் அரைமணி நேரம் நீடிக்கும். ஆர்வமுள்ளவர்கள் ஒருநாளைக்கு சுமார் 20 மனித நூல்களை ‘வாசிக்கலாம்’. இப்போதைக்கு மாதம் இருமுறை, மனித நூலக அமர்வுகள் நடைபெறுகின்றன.
பள்ளிகள், கல்லூரிகள் அல்லது வழக்கமான நூலகங்களே இந்த அமர்வுகளுக்கு இடம் ஒதுக்கித் தருகின்றன.
தான் ‘வாசித்த’ ஒவ்வொரு மனித நூலின் மூலமும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார், ஹர்ஷத். வழக்கமான பாதைவிட்டு நடை போடுவது இவரது இயல்பான குணம்.
அதனால்தான், தனது தந்தை மும்பை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் பேராசிரியராக இருந்த போதும், புனேயில் அரசியல் விஞ்ஞானம் பயின்றார், அதன்பின் ஐதராபாத்தில் ஊடகத் தொழில் நிர்வாகம் முதுநிலை பட்டப் படிப்பு படித்தார்.
ஹர்ஷத்தின் மனித நூலகம், மெல்ல மெல்ல வெற்றிநடை போடத் தொடங்கி யிருக்கிறது. இதன் அமர்வுகளில் பங்கேற்கும் அனைத்து மனித நூல்களும் தன்னார்வத்துடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்பவர்கள். வழக்கமான நூலகத்தில் அமைதி தவழும். ஆனால் இங்கே பேச்சு சத்தம் இருக்கும் என்பதுதான் வித்தியாசம்.
உலகில் கோடி கோடியாய் மனிதர்கள் உள்ளனர். எல்லோரது அனுபவங்களும், கற்றுக்கொண்ட பாடங்களும் நூல்களாவதில்லை. அதனால் அவற்றைப் பிறர் அறிய முடிவதில்லை.
எனவே இது புதுமை முயற்சி மட்டுமல்ல, பயனுள்ள முயற்சியும்தான்!

Related Tags :
Next Story