கலைமான்களைக் காக்க ஓர் ‘ஆப்’
காட்டு விலங்குகளால் கலைமான்கள் தாக்கப்படுவது குறித்துக் கவலை கொள்ளும் அவற்றின் மேய்ப்பாளர்கள், வேட்டையில் இருந்து கலைமான்களைக் காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓநாய்கள், காட்டுப்பூனை போன்ற மிருகங்களால் கலைமான்கள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க, அவற்றில் பாதுகாப்பு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மிகவும் அடர்ந்த வனங்களில், கலைமான் மேய்ச்சல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு, விலங்குகள் எங்குள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள இவை உதவுகின்றன.
பெண் கலைமான்களின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள சென்சார்களின் சமிக்ஞைகள், மேய்ச்சல்காரர்களின் செல்போனுடன் இணைக்கப்பட்டுள்ளன. காயமடைந்துள்ள மான்களை விரைவாக கண்டுபிடிக்கவும், மான்கள் இறந்தால் அவற்றின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறியவும் அவை வழிவகுக்கின்றன.
அடுத்த ஆண்டு, கலைமான்களை வேட்டையாடும் விலங்குகளைக் கண்டறியவும், இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள குழு திட்டமிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10 சதவீத கலைமான்கள், சாலை விபத்துகளிலும், ஓநாய்கள் போன்ற விலங்குகளின் வேட்டையிலும் இறக்கின்றன.
அதிலும் கலைமான்களை அதிகம் வேட்டையாடுவது, லிங்ஸ் என்று அழைக்கப்படும் ஒருவகை காட்டுப்பூனைதான். இந்த ஆண்டில், இவ்விலங்கு எந்தச் சூழலில் கலைமான்கள் கூட்டத்துக்கு அருகில் வருகிறது என்று அறியப்படவிருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம், கலைமான்களில் சென்சார்கள் பொருத்தப்பட்டன. இந்த சென்சார்களை பெண் கலைமான் களின் கழுத்தில் கட்டுவதன் மூலமாக, மொத்தக் கூட்டமும் எங்குள்ளது என்பதை மேய்ச்சல் பணியில் ஈடுபடுபவர்கள் பார்க்க முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சென்சார்கள், ஜி.பி.எஸ். உதவியுடன் இயங்குகின்றன. இவை, கலைமான்கள் எந்த இடத்தில் உள்ளன என்ற சமிக்ஞையை, அவற்றை மேய்க்கும் நபருக்கு தொடர்ந்து அளிக்கின்றன. தனிப்பட்ட தொலைத் தொடர்பு வசதியோடு இம் முறையை வடிவமைத்துள்ளதால், பல்வேறு கலைமான் களின் இருப்பிடத்தை கண்டறிய பல்வேறு செல்போன்கள் தேவைப்படுவதில்லை.
பின்லாந்தின் பின்னிஷ் கலைமான்கள் மேய்ப்போர் சங்கத்தின் தலைவரான மாட்டி சர்கேலா, “இணைய தளப் பொருட்கள் மீது எங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதிலுள்ள முக்கிய சவால், இன்றைய சென்சார்கள்கூட மிகவும் பெரியதாக இருப்பதுதான்” என்கிறார்.
“குறைந்த செலவில், ஓர் ஆண்டு முழுவதும் பயன்படக் கூடிய சென்சார்கள் நமக்குத் தேவை. ஆர்ட்டிக் பகுதியின் உயரங்களில், கலைமான்கள் இருக்குமிடங்களை அறிவது மிகக்கடினம். நாங்கள் இப்போது, சிறந்த தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்பட்ட சென்சார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” எனத் தெரிவிக்கிறார்.
தற்போதுள்ள சென்சார்கள், ஆக்டிலிட்டி என்ற பின்லாந்து நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன. இதற்கான இணைய வசதியை, டிஜிட்டா என்ற நிறுவனம் அளிக்கிறது.
கலைமான்கள் எங்கு உள்ளன என்பதைப் பார்க்க உதவும் வரைபடத் தொழில்நுட்ப மென்பொருளை மாபிடேர் என்ற ஓர் ஆரம்பநிலை நிறுவனம் வழங்குகிறது. இந்த மென்பொருளில் உள்ள வரைபடங்கள், அவசரச் சூழல்களில் கலைமான்களைக் கண்டறிய உதவுகின்றன.
லாப்லாந்து பகுதியில் கலைமான்களை மேய்ப்பது என்பது பெரிய தொழிலாக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் மூன்று லட்சம் கலைமான்கள் மேய்க்கப்படுவதோடு, அவற்றின்மூலம் 25 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறைச்சி, தோல் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கலைமான்கள் தமது வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரத்தில் தமக்கு விருப்பமான காட்டுப்பகுதிகளில் மேய்ந்து திரிவதால், அவற்றுக்கு ஆபத்துகளும் அதிகமாகவே உள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் நார்வேயில் நடந்த ஒரு ரெயில் விபத்தில் நூறு கலைமான்கள் கொல்லப்பட்டன.
“புதிய கருவி, கலைமான்களுக்கும், மேய்ச்சல் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் உதவிகரமாக அமையும்” என்று சார்கேலா கூறுகிறார்.
“காயமடைந்த கலைமான்களைக் காப்பாற்றுவதும், இறந்த வற்றின் மரணத்தை உறுதிசெய்து, அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதும் பொதுவான விஷயமாக இருந்தாலும், அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதன்மூலம், அவற்றின் குணாதிசயங்களை புரிந்துகொள்ளவும் முடியும். இந்தத் தொழில்நுட்பம், மேய்ச்சல் பணியில் ஈடுபடுவோரின் வாழ்க்கையைச் சுலபமாக்கும். இளைய தலைமுறையினரையும் இந்தப் பணியை விரும்பச் செய்யும்” என்றார்.
இந்தக் குழுவினர் தொழில்நுட்பம் பக்கம் திரும்பியிருப்பது இது முதன்முறையல்ல. பத்து ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பொரொக்கெல்லோ என்ற செயலியை இக்குழு உருவாக்கியது. இதன்மூலம், சாலையில் கலைமான்களை கடந்துசெல்லும் வாகன ஓட்டிகள், மற்றவர் களுக்கு எச்சரிக்கை செய்ய முடியும்.

Related Tags :
Next Story