பண்ணைக்குட்டை அமைத்து நீராதாரத்தை உயர்த்திட வேண்டும் விவசாயிகளுக்கு, கலெக்டர் அறிவுரை


பண்ணைக்குட்டை அமைத்து நீராதாரத்தை உயர்த்திட வேண்டும் விவசாயிகளுக்கு, கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 7 Jan 2018 3:45 AM IST (Updated: 7 Jan 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு பாசன நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கலெக்டர் லதா தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பாசன நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கலெக்டர் லதா தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.

 பின்னர் அவர் கூறும்போது, பருவநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு வகையான மாறுதல்கள் ஏற்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் மழைநீர் சேமிப்பு என்பது அனைவராலும் பின்பற்ற வேண்டிய முக்கியமான முயற்சியாக ஏற்றுக் கொள்ளவேண்டும். விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்து மழைநீரை சேமித்து நீராதாரத்தை உயர்த்திட வேண்டும். குறைந்த நீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றிட சொட்டுநீர் பாசன முறையை செயல்படுத்த வேண்டும். மேலும், விவசாயிகள் அனைவரும் சொட்டுநீர் பாசனம், மழைநீர் சேகரிப்பு, நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பம், சிக்கன நீர் சேமிப்பு முறையில் மரம் நடுதல், மண் பரிசோதனை, சிறுதானிய பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பத்தை கையாள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாசன மேலாண்மை பயிற்சி நிலைய தலைமை இயக்குனர் அப்துல் ரசீத், வேளாண்மை இணை இயக்குனர் செல்வம், பேராசிரியர்கள் மிர்டில் கிரேஸ், செந்தூர்குமரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கருணாகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story