ஓட்டப்பிடாரம் அருகே லாரிகள் மோதல்; டிரைவர் பலி


ஓட்டப்பிடாரம் அருகே லாரிகள் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 7 Jan 2018 3:00 AM IST (Updated: 7 Jan 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் ஒருவர் பலியானார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் ஒருவர் பலியானார்.

லாரி டிரைவர்


நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு வர்ணம் பூசுவதற்கான உபகரணங்களை ஏற்றிக்கொண்டு, கோவையில் இருந்து நெல்லை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஜெயம் பெருமாள் (வயது 32) ஓட்டி வந்தார்.

அந்த லாரி நேற்று மாலை தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றானை கடந்து, ஓட்டப்பிடாரம் குறுக்குசாலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் மீது, அந்த லாரி பயங்கரமாக மோதியது.

சாவு

இதில் ஜெயம்பெருமாள் ஓட்டி வந்த லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயம்பெருமாள் படுகாயம் அடைந்தார். அவரை அந்த பகுதியில் வந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story