நாமக்கல் மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் இயங்கின அமைச்சர் தங்கமணி பேட்டி


நாமக்கல் மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் இயங்கின அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 7 Jan 2018 4:30 AM IST (Updated: 7 Jan 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் இயங்கியது என அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் 6 இடங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி வழங்கி தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் இயங்கி வருகிறது. வேலைநிறுத்தம் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தேவையான அளவுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது என கூறி உள்ளனர். அதன் அடிப்படையில் ஊழியர்கள் பணிக்கு வந்து 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 2 ஆயிரம் டாஸ்மாக் பார்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. 600 பார்கள் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒப்பந்ததாரர்கள் என்னை (அமைச்சரை) நேரில் சந்தித்து ஏலத்தொகைக்கான சதவீதத்தை 2½ சதவீதத்திற்கு கீழ் குறைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதற்கான வாய்ப்புகள் குறைவு.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story