குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு  அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 7 Jan 2018 3:00 AM IST (Updated: 7 Jan 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில்– கழுகுமலை ரோட்டில் காளியம்மன் கோவில் அருகே உள்ள நியாய விலைகடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி– சேலை வழங்கும் விழா நடந்தது.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில்– கழுகுமலை ரோட்டில் காளியம்மன் கோவில் அருகே உள்ள நியாய விலைகடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி– சேலை வழங்கும் விழா நடந்தது.

அமைச்சர் ராஜலெட்சுமி தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, மாவட்ட வழங்கல் அதிகாரி புண்ணியகோடி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி, துணை பதிவாளர்கள் தொண்டிராஜ், பாலகிருஷ்ணன், அ.தி.மு.க. அமைப்பு மாநில செயலாளர் சுதா பரமசிவம், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மாநில துணை தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவிலும் அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டார். இதில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகை சாதம், வளையல்கள், பழங்கள் வழங்கப்பட்டது.

Next Story