வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 80 சதவீத அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கம்
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
வேலூர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 4-ந் தேதி இரவு முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தனியார் பஸ், ரெயில்களில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பயணிக்கின்றனர்.
இந்த போராட்டத்தால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள், முதியவர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் 571 டவுன் மற்றும் ‘ரூட்’ பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் நேற்று மாலை நிலவரப்படி 461 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. மீதமுள்ள பஸ்களை தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதில் 613 டிரைவர்கள், 640 கண்டக்டர்கள், 207 டெக்னீசியன்கள், 24 அலுவலக ஊழியர்கள் என 1,484 பேர் பணிக்கு வரவில்லை’ என்றார்.
மேலும் இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், போராட்டம் நடைபெற்றாலும் அரசு பஸ்கள் பல இயக்கப்படுகிறது. ஆனால் இயக்கப்படும் பஸ்கள் மீது சில இடங்களில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே பஸ்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதாரணமாக வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் ஒரு பஸ்சில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சத்துவாச்சாரி, பெருமுகை வரை சத்துவாச்சாரி போலீசார் பாதுகாப்பு வழங்குவர். அவர்கள் பஸ்சில் ஏறி பயணம் செய்தோ, பஸ் முன்னால் மோட்டார்சைக்கிளில் சென்றோ பாதுகாப்பு வழங்குவார்கள். இந்த பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2 தனியார் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
வேலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து பஸ்கள் தடையின்றி இயக்கப்படுகிறது. ஆனால் முன்பதிவு செய்யப்படவில்லை. முன்பதிவு செய்ய வந்த பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தடையில்லா போக்குவரத்து சேவையை அளிக்கும் வகையில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு செய்யும் பணி நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 வட்டார போக்குவரத்து அலுவலகங் களில் நடந்தது. இதில் கனரக வாகன ஓட்டுனர் உரிமத்துடன் பலர் கலந்து கொண்டனர்.
அதன்படி வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் 50 டிரைவர்கள் 15 கண்டக்டர்களும், வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 56 டிரைவர்களும், 10 கண்டக்டர்களும், ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 32 டிரைவர்களும் என மொத்தம் 163 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story