கடன் தொல்லை-காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை ‘செல்பி’ வீடியோவில் உருக்கமான பேச்சு
பெங்களூருவில், வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கடன் தொல்லை- காதல் தோல்வியால் இந்த முடிவை எடுத்ததாக ‘செல்பி‘ வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.
பெங்களூரு,

வாலிபர் தற்கொலை
பெங்களூரு குருபரஹள்ளியில் உள்ள ஜே.சி.நகர் 16-வது மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ராஜேஷ் (வயது 26). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மகாலட்சுமி லே-அவுட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, அவர் கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டது தெரியவந்தது. ஆனாலும், அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. பின்னர், அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உருக்கமான வீடியோ
இந்த நிலையில், ராஜேசின் செல்போனை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டனர். அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ராஜேஷ் ‘செல்பி‘ வீடியோ எடுத்து கொண்டதும், அந்த வீடியோவில் அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் உருக்கமாக பேசியதும் தெரியவந்தது.
அந்த வீடியோவில், ‘நான் கிரண் என்பவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். இந்த கடனை திரும்ப செலுத்த முடியாததால் தொல்லைகள் கொடுக்கப்பட்டது. யாரும் நிதிநிறுவன அதிபர்களிடம் கடன் வாங்க வேண்டாம். நான் கடன் வாங்கியதற்கு என் குடும்பத்தை தொல்லை செய்யாதீர்கள். சில ஆவணங்களில் கையெழுத்திட்டு வீட்டில் வைத்து உள்ளேன். அதை எடுத்து கொள்ளுங்கள்‘ என அவர் கடன் தொல்லை குறித்து கூறியுள்ளார்.
மேலும், தற்கொலை செய்த ராஜேஷ் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த காதல் தோல்வி அடைந்துள்ளது. இந்த காதல் குறித்து அவர் பேசிய வீடியோவில் ‘என்னுடன் இருப்பதாக கூறிய நீ பிரிந்து சென்று விட்டாய். உனக்காக அனைத்தையும் செய்துள்ளேன். ஆனால் நீ என்னை ஏமாற்றி விட்டாய். ஐ லவ் யூ‘ என உருக்கமாக கூறியுள்ளார். மேலும், அவர் தனது தற்கொலை முடிவுக்காக தனது பெற்றோரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இதுகுறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் ஊழியர்
இதேபோல், ஆந்திராவை சேர்ந்தவர் வீணா (23). இவர், பெங்களூரு மகாதேவபுரா அருகே உள்ள லட்சுமி சாகர் லே-அவுட் 1-வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த வீணா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் வசித்து வந்தவர் சியாதி (17). தனியார் பி.யூ. கல்லூரியில் படித்து வந்த இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சிந்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story