தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது ரூ.30 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
பெங்களூருவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவருக்கு 70-க்கும் அதிகமான வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவருக்கு 70-க்கும் அதிகமான வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கைதானவரிடம் இருந்து ரூ.30 லட்சம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாலிபர் கைது
பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் நேற்று பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
பெங்களூருவில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததாக ஹெண்ணூரில் உள்ள பிரகதி லே-அவுட்டில் வசித்து வரும் கார்த்திக் என்ற ‘எஸ்கேப்‘ கார்த்திக் (வயது 28) என்பவரை கொத்தனூர் போலீசார் கைது செய்தனர். இவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கார்த்திக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
இவர் தனது கூட்டாளிகளான குமார், ஜெகன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். திருடிய பொருட்களை அவர் விற்பனை செய்து குடும்பம் நடத்தி வந்ததோடு, சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து வந்துள்ளார். தலைமறைவாக உள்ள அவருடைய கூட்டாளிகள் 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறோம்.
70-க்கும் அதிக வழக்குகள்
கைதான கார்த்திக் பெங்களூருவில் மகாதேவபுரா, திலக் நகர், அம்ருதஹள்ளி, பானசவாடி, தலகட்டபுரா, மகாலட்சுமி லே-அவுட், ஹெப்பால் உள்பட பல்வேறு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு உள்ளார். அத்துடன், ஹாசன் மற்றும் மைசூரு மாவட்டங்களிலும் அவர் கைவரிசை காட்டியுள்ளார். 2005-ம் ஆண்டில் திருட்டில் ஈடுபட தொடங்கிய அவர் மீது இதுவரை 70-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி உள்ளது.
திருட்டு வழக்கு தொடர்பாக 2007-ம் ஆண்டு போலீசாரிடம் சிக்கிய கார்த்திக் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சிறைக்கு உணவு கொண்டு சென்ற வாகனத்தில் ஏறி யாருக்கும் தெரியாமல் அவர் தப்பித்தார். தலைமறைவாக இருந்த கார்த்திக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இதனால் அவர் ‘எஸ்கேப்‘ கார்த்திக் என்ற பெயரை பெற்றார்.
ரூ.30 லட்சம் நகைகள் பறிமுதல்
கடந்த 2012-ம் ஆண்டு 4 திருட்டு வழக்குகள் தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து ஒரு மாதம் சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு மீண்டும் திருட்டில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டு விசாரணைக்கு சரியாக ஆஜராகாமல் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்தார்.
இதன் காரணமாக கார்த்திக்கு எதிராக பல்வேறு பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவர் போலீசில் சிக்கியுள்ளார். கைதான கார்த்திக்கிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் உடன் இருந்தார்.
நகைகளை பார்வையிட்டனர்
முன்னதாக கார்த்திக்கிடம் இருந்து பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகளை கூடுதல் போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங், வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Tags :
Next Story