பேசின்பாலம் ரெயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் காயம்


பேசின்பாலம் ரெயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் காயம்
x
தினத்தந்தி 7 Jan 2018 2:25 AM IST (Updated: 7 Jan 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

பேசின் பாலம் ரெயில் நிலையத்தில் நேற்று பராமரிப்பு பணி நடைபெற்றபோது மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் காயமடைந்தனர்.

ராயபுரம், 

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் சந்தன்மிஸ்ரா (வயது 30), ராஜேந்திரபிரசாத் (32). இருவரும் தென்னக ரெயில்வேயில் மின் வாரிய ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் பேசின் பாலம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில், பேசின் பாலம் ரெயில் நிலையத்தில் நேற்று பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது ஒரு மின் கம்பியில், நூல் ஒன்று சிக்கி இருந்தது. அதை எடுக்க முயன்றபோது, சந்தன்மிஸ்ராவை மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற முயற்சித்த ராஜேந்திரபிரசாத் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினர். இருவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story