திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மறு நேர்காணல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் நடப்பதாக இருந்த மறு நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது மறு நேர்காணல் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ரோட்டில் உள்ள கலவலகண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மறு நேர்காணல் நடைபெற உள்ளது.
மறு நேர்காணலில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதத்துடன் கீழ்கண்ட அசல் சான்றிதழ்கள் மற்றும் ஒரு செட் நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும். சான்றிதழ்களாக மதிப்பெண் பட்டியல், பள்ளி இறுதி சான்றிதழ், வயது குறிப்புடன் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, இருப்பிட சான்று, ஆர்.டி.ஓ.வால் வழங்கப்பட்ட ஆதரவற்ற விதவைசான்று, தாசில்தாரால் வழங்கப்பட்ட கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, விதவை சான்று, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆண் வாரிசு இல்லாத சான்று, குடும்பத்தில் யாரேனும் மாற்றுத்திறனாளி எனில் அதற்கான அடையாள அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story