வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 7 Jan 2018 4:00 AM IST (Updated: 7 Jan 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை இருளர் இன பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், வெண்மனம்புதூர் இருளர் காலனி, கன்னிமாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இருளர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா கிடைக்க எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் அவர்கள் அரசின் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் தங்கள் குழந்தைகளுடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு காலதாமதம் செய்யாமல் அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாவை வழங்குமாறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திரளான இருளர் இன மக்கள் இருளர் மக்கள் கட்சி நிறுவனர் பிரபு தலைமையில் இது தொடர்பான புகார் மனுவை கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

Next Story