புனே வன்முறை எதிரொலி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் அசோக் சவான் வலியுறுத்தல்
புனே வன்முறை சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று அசோக் சவான் வலியுறுத்தினார்.
மும்பை,
புனே வன்முறை சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று அசோக் சவான் வலியுறுத்தினார்.
வன்முறைபுனே அருகே பீமா– கோரேகாவ் போர் நினைவுச்சின்னம் அருகே கடந்த 1–ந் தேதி இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மாநிலம் முழுவதும் வன்முறை மூண்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தார்மீக பொறுப்புவன்முறைக்கு வித்திட்ட நிகழ்வுகள் குறித்தும், முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு எப்படி தவறியது என்பது குறித்தும் நாங்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டோம். வன்முறையை தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும்.
அரசு எந்திரத்தின் தோல்வியால் தான் வன்முறை ஏற்பட்டது என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். மாநிலத்தில், அரசு ஆதரவுடன் கடந்த 3 ஆண்டுகளாக சாதி கலவத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அசோக் சவான் தெரிவித்தார்.
ராகுல்காந்தி வருகைமேலும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வாரியான முகாம்கள் குறித்து பட்டியலிட்ட அவர், ‘‘மராட்டியத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முகாமிட்டு பேச வேண்டும் என்று விரும்புகிறோம். மேற்கு மராட்டியத்துக்கு ராகுல்காந்தி விரைவில் வருவார்’’ என்றார்.