மாநில அளவிலான தடகள போட்டிகள் அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்
புதுவையில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நேற்று தொடங்கின. இதனை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி,
புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் விளையாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் பணி சார்பில் மாநில அளவிலான தடகள போட்டி நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு பள்ளி கல்வி இயக்குனர் குமார் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில் 14, 17,19 வயத்திற்கு உள்பட்ட ஆண்கள் பெண்கள் என 6 பிரிவுகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 3 முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் 100, 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டன.
பரிசளிப்பு விழா
இந்த போட்டிகளில் புதுவையில் உள்ள 4 வட்டங்கள், காரைக்காலில் உள்ள 2 வட்டங்கள், மாகி, ஏனாம் பகுதியில் உள்ள தலா 1 வட்டம் என 8 வட்டங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற உள்ளது.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளனர்.
Related Tags :
Next Story