ஒலி கொடுத்த வாழ்க்கை
கர்நாடக மாநிலத்தில் வானொலியில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றிருக்கிறார், காஜல்.
மங்களூருவில் பணியாற்றும் இவர் கல்லூரிகளில் நடக்கும் ‘சுபமங்களா’ எனப்படும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒலிபரப்பாகிறது.
காஜல் மைசூர் அருகில் உள்ள மண்டியா பகுதியை சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தபோது தன்னுடைய உடலளவிலும், மனதளவிலும் மாற்றம் ஏற்படுவதை கவனித்திருக்கிறார்.
‘‘எனது வயதொத்த மாணவர்கள் கிரிக்கெட், கால்பந்து, மல்யுத்தம் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார்கள். நானோ மாணவி களுடன் அமர்ந்து பாட்டு, நடனம் கற்றுக்கொள்ள விரும்பினேன்’’ என்கிறார்.
காஜல் 7-ம் வகுப்பு படிக்கும்போது திருநங்கைகளுடன் நெருங்கி பழக தொடங்கி இருக்கிறார். அப்போதுதான் தன்னுள் ஏற்பட்டு வரும் மாற்றத்தை உணர்வுப்பூர்வமாக புரிந்து கொண்டிருக்கிறார். இதையடுத்து அடிக்கடி திருநங்கைகளை சந்தித்து பேசி அவர்களுடனான தொடர்பை வலுப்படுத்தி இருக்கிறார். 10 வயதில் வீட்டை விட்டு வெளியேறி மும்பையில் வசிக்கும் திருநங்கைகளுடன் இணைந்திருக்கிறார். 13 வயதில் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருக்கிறார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டபோதிலும் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி இருக்கிறார்.
மும்பையில் 10-ம் வகுப்பு படித்து முடித்தவர், பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து மேல்நிலை கல்வியை தொடர்ந் திருக்கிறார். பள்ளி இறுதி தேர்வில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். பின்பு மீண்டும் மும்பை சென்று அங்கு குடியேறி இருக்கிறார்.
தொலைநிலைக்கல்வியை ஒரு பக்கம் தொடர, மறுபக்கம் தனித்திறமை களையும் மெருகேற்ற தொடங்கி இருக்கிறார். சிறுவயதில் ஆர்வம் காட்டிய நடனத்தை முழுமையாக கற்று தேர்ந்தவர், கிளப்புகளில் நடனம் ஆடியுள்ளார். சர்க்கஸ் கம்பெனியிலும் நடன கலைஞராக பணிபுரிந்திருக்கிறார். பின்னர் உடுப்பி திரும்பி வந்து அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். அதுபற்றி குறிப் பிடுகையில், ‘‘இங்குள்ள மக்கள் என் மீது அளவுக்கதிகமான அன்பையும், மரியாதையையும் காண்பித்தார்கள். இந்த அளவிற்கு யாரும் என்னிடம் பாசமாக நடந்து கொண்டதில்லை. அதனால் நான் இந்தப் பகுதியிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டேன்’’ என்கிறார்.
நடனம்தான் காஜலின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. சினிமா ஒன்றிலும் நடித்திருக்கிறார். அதன் மூலம் வானொலியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
‘‘வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே எங்களால் எங்களது திறமைகளை நிரூபித்து காண்பிக்க முடியும். எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்தான். அதனை தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். என்னை போலவே திருநங்கைகள் ஒவ்வொரு வரின் கனவுகளும் நனவாகி அவர்கள் வாழ்வில் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கவேண்டும். அது சமூகத்தின் கைகளில்தான் இருக்கிறது’’ என்கிறார்.

Related Tags :
Next Story