விந்தையான ஜோடி.. வினோதமான பின்னணி..
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய சுகன்யா கிருஷ்ணாவும்- பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய ஆரவ் அப்புக்குட்டனும் திருமண வாழ்வில் இணையவிருக்கிறார்கள்.
இந்தியாவில் இப்படிப்பட்ட முதல் ஜோடியாக இவர்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த ஜோடியைப் போலவே இவர்களின் கதையும் வினோதமான பின்னணியைக்கொண்டது.
46 வயதாகும் ஆரவும், 22 வயதாகும் சுகன்யாவும் ஒரு மருத்துவ மனையின் காத்திருப்பு அறையில்தான் முதன்முதலில் சந்தித்துக்கொண்டனர். அப்போது அவர்களைப் பார்த்த யாரும், சாதாரண ஆண், பெண் என்றுதான் அவர்களைக் கடந்து போயிருப்பார்கள்.ஆனால் அது அப்படியல்ல. ஆரவ் பெண்ணாக வளர்க்கப்பட்டவர். சுகன்யா ஒரு பையனாக வளர்க்கப்பட்டவர். ஆனால் மனதுக்குள் ஆணாக உணர்ந்த ஆரவும், பெண்ணாக உணர்ந்த சுகன்யாவும் அப்படியே வெளித்தோற்றத்தை மாற்றிக்கொள்ளப் போராடினர்.
அந்த மருத்துவப் போராட்ட பயணத்தில் மருத்துவ மனைக்குச் சென்றிருந்தபோது இவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. டாக்டரை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஆரவ், அங்கே செல்போனில் மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்த சுகன்யாவை பார்த்தார். ஆர்வம் உந்த, ‘நீங்க மலையாளியா?’ என்று கேட்டார். அப்படித்தான் அவர்களுக்கு இடையிலான உறவு தொடங்கியது. ஆரம்பத்தில் நட்பாக விதைவிட்டு, நாளடைவில் காதலாக மலர்ந்தது.
முதலில் ஒரு கேள்வியில் தொடங்கிய உரையாடல், நீண்டுகொண்டே போனது. டாக்டரை சந்திக்க சுகன்யாவுக்கு முன்பே நிறைய பேர் காத்திருந்ததால், அவர் ஆரவுடன் பேசுவதற்கு நிறைய நேரம் கிடைத்தது. சுகன்யாவை டாக்டரை அழைக்கும் வரை சுமார் 3 மணி நேரம் பேசித் தீர்த்தனர்.
உள்ளே சென்று டாக்டரிடம் பேசிக் கொண்டிருக் கும்போதுதான், ஆரவின் செல்போன் எண்ணை வாங்கவில்லையே என்று வருந்தினார் சுகன்யா. டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுவிட்டுத் தவிப்புடன் அவர் வெளியே வர, ஆரவ் அவருக்காகக் காத்திருந்தார். ‘‘நான் உங்க நம்பரை வாங்க மறந்துட்டேன்’’ என்றார் புன்னகையுடன்.
இப்படித் தொடங்கிய நெருக்கம், ஒன்றாக திருமணப் பந்தத்தில் இணையும் உறுதியில் வந்து நிற்கிறது. இருவரும் அதற்கு முன் சில சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்போது பெங்களூருவில் ஒரு சிறிய வீட்டில் ஒன்றாகத் தங்கியிருக்கின்றனர்.
கொச்சியில் பிறந்த சுகன்யாவின் பாலினம் குறித்து குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு ஆண் ஹார்மோனான டெஸ்ட்டோஸ்டீரோனை வழங்கத் தொடங்கினர் அவரது குடும்பத்தினர். அவரது குரல் கனமானது, முகம் உருண்டையானது. ஆனால் சுகன்யா ஒரு பெண்ணாக உணர்வது மாறவில்லை. அவரது அப்பா இறக்க, அம்மா மறுமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றார். அந்தநிலையில், சொந்த வீட்டிலேயே தான் ஒரு விரும்பத்தகாதவர் போல இருப்பதாக சுகன்யாவுக்குத் தோன்றியது. பத்தாவதுடன் பள்ளியில் இருந்து நின்றுவிட்ட அவர், பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு ஒரு கணினி நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
கேரளத்தின் காஞ்சிரப்பள்ளியில் பிறந்தவர் ஆரவ். இளவயதில் வெளித்தோற்றத்தில் பெண்ணாகவும் மனதில் ஆணாகவும் இருந்தார். பள்ளியில் பெண்கள் மத்தியில் அமர்வதையே சங்கடமாக உணர்ந்தார்.
ஆரவின் தவிப்பைப் புரிந்து கொண்ட அவர் அம்மா ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, வளர வளர எல்லாம் சரியாகி விடும் என்றார் அவர். ஆனால் அப்படி ஆகவில்லை. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்பதைப் போல அலைபாய்ந்த ஆரவ், தனக்குத் தெரிந்த டாக்டர்கள், மருந்தாளுநர்களிடம் எல்லாம், தன்னை பையனைப் போல மாற்றிக்கொள்ள டெஸ்ட்டோஸ்டீேரான் ஹார்மோனுக்காக எந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், என்ன ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டு உபயோகித்தார்.
கல்லூரிக் காலத்தில் தாய் மறைய, ஆரவ் படிப்பை நிறுத்தினார். அவரைப் பற்றிக் கவலைப்படாமல் அப்பா மறுமணம் செய்து கொண்டார். மீண்டும் படிப்பின் பக்கம் திரும்பிய ஆரவ், பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான ஒரு படிப்பைப் படித்தார். மும்பை சென்று பல ஆண்டுகளைக் கழித்தநிலையில் அவருக்கு துபாயில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு வந்ததால் அங்கு பறந்தார்.
தன்னை முழுமையாக ஆணாக மாற்றிக்கொள்வதற்கான அறுவை சிகிச்சைக்காக இடையில் இந்தியா திரும்பி வந்தார், ஆரவ். அதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட, ‘விசா’ காலாவதி ஆகி விட்டது. எனவே இந்தியாவிலேயே தங்கி விட்டார்.
இதுதான் சுகன்யா, ஆரவின் முன்கதை.
மருத்துவமனையில் பார்த்து செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டபின் இருவரும் அடிக்கடி தொடர்புகொண்டு பேசத் தொடங்கினர்.
‘‘எனக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் நான் அழைத்துப் பேசும் முதல் நபராக ஆரவ் ஆனார். அவருக்கும் அப்படித்தான் என்பது பிறகு அவர் சொன்னபோது தெரிந்தது’’ என்கிறார் சுகன்யா.
ஆனால் பல காலம் ஓடியது தொலைபேசி வழித் தொடர்புதான். இந்தியாவில் இருந்து துபாய் சென்றுவிட்டு கடந்த மே மாதத்தில் ஆரவ் இந்தியா திரும்பியபோதுதான் இருவரும் மீண்டும் நேரில் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது ஹார்மோன் ஊசிகளுக்கான செலவு கட்டுப்படி ஆகாததால் அவற்றை நிறுத்திவிட்டதாக சுகன்யா கூறினார். உடனடியாக, அதற்கான செலவை தான் ஏற்றுக்கொள்வதாக ஆரவ் கூறி, சுகன்யாவை மும்பையில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் பாலியல் மாற்று அறுவைசிகிச்சைகள் செய்துகொண்டனர்.
அவர்களின் பாலியல் மாற்றத்தை உறுதிசெய்யும் சான்றிதழ்கள் கிடைத்தபின், ஒருநாள் ஆரவ் சுகன்யாவை அழைத்துப் பேசினார்.
‘‘நமக்கிடையில் வயது வித்தியாசம் ஒரு பிரச்சினை இல்லை என்றால், நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ளலாமா?’’ என்று கேட்டார்.
சுகன்யாவுக்கு மகிழ்ச்சித் திகைப்பு. உடனே ஒப்புக்கொண்டு விட்டார்.
இப்போது ஆரவின் முகத்தை அன்பொழுகப் பார்த்தபடி, ‘‘நான் அறிந்தவர்களிலேயே மிகவும் உண்மையான நபர் ஆரவ்’’ என் கிறார்.
சுகன்யா- ஆரவுக்கான பாலியல் மாற்றச் சிகிச்சைகள் இன்னும் முழுமை பெற்றுவிடவில்லை. எஞ்சியுள்ள அறுவைசிகிச்சைகளுக்காக இருவருக்கும் ரூ. 8 லட்சம் தேவைப்படுகிறது. அவ்வளவு பணம் அவர்களிடம் இல்லை.
சேமிப்பில் இருந்த ரூ. 1 லட்சம், கடனாகப் பெற்ற ரூ. 1 லட்சம் என்று இரண்டு லட்ச ரூபாய் திரட்டிவிட்டனர். மீதமுள்ள ரூ. 6 லட்சத்துக்கு என்ன செய்வது என்ற குழப்பம். இப்போதைக்கு இரு வருக்குமே வேலை இல்லை.
வாழ்க்கையில் தாங்கள் வெற்றி பெறுவதுடன், தங்களைப் போன்ற மாற்றுப் பாலினத்தவருக்கும் உதவ வேண்டும் என்பது இந்த அபூர்வ ஜோடியின் ஆசை!

Related Tags :
Next Story