உஷாரய்யா உஷாரு
அவளுக்கு வயது 25. கம்பீரமான உடல்வாகு கொண்டவள். பிளஸ்-டூ படித்துவிட்டு, ஓட்டல் ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிந்தாள். அவளது தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலைபார்க்கிறார். குடிப் பழக்கம் கொண்டவர். அதனால் தாயார் வீட்டு வேலை செய்து, குடும்பத்தை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவளுக்கு, தந்தை வரன் தேடிக்கொண்டிருந்தார். அவள் ‘குடிப்பழக்கமில்லாத மாப்பிள்ளை வேண்டும்’ என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதித்தாள். ஆனால் அவர் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வந்த வரன்கள் எல்லோருமே மதுப்பழக்கம் கொண்டவர்களாகவே இருந்தார்கள். அவளும் நிராகரித்துக் கொண்டே இருந்தாள்.
இறுதியில் அவளுக்காக பேசி முடித்த வரன், டிரைவராக வேலைபார்த்துக் கொண்டிருப்பவன். பெண் பார்க்க வந்தபோதே அவள், ‘குடிப்பீர்களா?’ என்று கேட்டாள். அவன், அந்த பழக்கமே கிடையாது என்றான். அதனால் மண நாள் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் பேசி முடிக்கப்பட்ட பின்பு, வருங்கால கணவர் தன்னோடு பேசுவார் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவன் பேசவில்லை. அவளாக பேச முயற்சித்தபோதும் அவன் மகிழ்ச்சியாக பேச்சை தொடரவில்லை. அவள் குழம்பினாள். தனது உள்ளுணர்வு எச்சரிப்பதாக தந்தையிடம் கூறி, மீண்டும் வரனை பற்றி நன்றாக விசாரிக்கும்படி கூறினாள். ஆனால் அவரோ, அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘நான் விசாரித்தேன். பையன் ரொம்ப தங்கமானவன்னு ஊரில் எல்லோரும் சொல்கிறார்கள்’ என்றார்.
அவளுக்கு தந்தையின் பேச்சில் நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால் தனது தாய் மாமனை அனுப்பி வைத்தாள். அவர் மாப்பிள்ளையை வரவழைத்து பேசினார். ‘நீங்கள் முழுமனதோடு திருமணத்திற்கு சம்மதிக்கிறீர்களா? உங்களுக்கு விருப்பக்குறைவு ஏதாவது இருந்தால் திருமணத்தை நிறுத்திவிடலாம். ஏதாவது பிரச்சினை இருந்தால் வெளிப்படையாக பேசுங்கள்’ என்றார். ஆனால் அப்போதும் அவன், திருமணத்தில் தனக்கு முழு சம்மதம் என்றான்.
திருமணம் நடந்தது. அவளது நண்பர்கள் என்று வந்தவர்களில் சிலர் பெண்களை பார்த்த விதமும், பேசிய பேச்சும் பெண் வீட்டாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் அவ்வப்போது புது மாப்பிள்ளையிடம் வந்து ரகசியம் பேசியபடி இருந்தனர்.
முதலிரவு அறை. அவள் வெகு நேரம் காத்திருந்த பின்பு, குனிந்த தலையோடு புதுமாப்பிள்ளை உள்ளே நுழைந்தான். இரண்டு மணி நேரம் கழிந்திருக்கும். திடீரென்று அறைக் கதவு திறந்தது. பொத்தென்று புதுமாப்பிள்ளை வெளியே வந்து விழுந்தான். பால் செம்பால் அடித்த அடியில் அவன் உதடு பிய்ந்திருந்தது. தலையிலும் ஆங்காங்கே ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.
அவளது பெற்றோர் பயந்து ஓடிவந்து பார்த்தபோது காயம் தந்த வேதனையில், போதையை மீறி அவன் துடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஒரு வாடகைக்காரை ஏற்பாடு செய்து புது மாப்பிள்ளையை மட்டும் ஏற்றி, அவனது வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.
முதலிரவு அறைக்குள் நடந்தது இதுதான்..!
அறைக்குள் அவன் முழு போதையில் நுழைந்திருக்கிறான். அதனால் அதிர்ந்துபோன புதுப்பெண் கோபத்தில் கத்தி காரணம் கேட்டபோது ‘தனக்கு 15 வயதில் இருந்து குடிப்பழக்கம் இருப்பதாகவும், திருமணமான பெண் ஒருத்தியோடு தொடர்பில் இருப்பதாகவும், அவளை மறக்க முடியாததால் குடித்திருப்பதாகவும்..’ ஒப்புதல் கொடுத்துள்ளான். தன்னை அவன், திட்டமிட்டு ஏமாற்றியதால் வெகுண்டெழுந்த அவள் உள்ளே வைத்தே அவனை ஆத்திரம் தீர அடித்து துவைத்து விட்டாள்.
மணப்பெண் பக்கம் நியாயம் இருந்ததால் மாப்பிள்ளை வீட்டார் பிரச்சினையை அப்படியே அமுக்கி, ஆறப்போட்டு அந்த பிரச்சினைக்குரிய ‘மாப்பிள்ளையை’ மும்பைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
- உஷாரு வரும்.

Related Tags :
Next Story