பாகிஸ்தான் சிறையில் இருந்து 147 இந்திய மீனவர்கள் விடுதலை


பாகிஸ்தான் சிறையில் இருந்து 147 இந்திய மீனவர்கள் விடுதலை
x
தினத்தந்தி 8 Jan 2018 2:00 AM IST (Updated: 8 Jan 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

அரபி கடலில் பாகிஸ்தான் கடல் எல்லையில் புகுந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்து கராச்சி சிறையில் அடைத்து உள்ளது.

இஸ்லாமாபாத், 

அரபி கடலில் பாகிஸ்தான் கடல் எல்லையில் புகுந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்து கராச்சி சிறையில் அடைத்து உள்ளது. அவ்வாறு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 300 பேரை ஜனவரி 8–ந்தேதிக்குள் விடுவிக்கப்போவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்து இருந்தார்.

அதன்அடிப்படையில் முதல் கட்டமாக சிறிய வழக்குகளில் கைதான 145 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுத்தது. 2–வது கட்டமாக நேற்று 147 மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது.

விடுதலையான மீனவர்கள் நேற்று ரெயில் மூலம் லாகூர் வந்தனர். பின்னர் அவர்கள் வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கராச்சி சிறையில் இன்னும் 262 இந்திய மீனவர்கள் உள்ளதாக ஜெயில் அதிகாரி மாலிர் தெரிவித்தார்.

Next Story