டிரைவரை தாக்கி ஆட்டோவுக்கு தீ வைப்பு 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
தக்கலை அருகே டிரைவரை தாக்கி ஆட்டோவுக்கு தீ வைப்பு 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
தக்கலை,
தக்கலை அருகே உள்ள முகமாற்றூர் தென்னிவிளை பகுதியை சேர்ந்தவர் சந்திப் (வயது 30), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த வில்சன் என்பவருக்கு தனது ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி சென்றார். அதற்கான கட்டணத்தை வில்சன் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
இந்தநிலையில் மீண்டும் வாடகை கட்டணம் கேட்டபோது, சந்திப்புக்கும், வில்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று இரவு சவாரி முடிந்த பின்பு சந்திப் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்றபோது வில்சன் மற்றும் 5 பேர் கும்பல் வழிமறித்து சந்திப்பை தாக்கிவிட்டு ஆட்டோவை தீ வைத்து எரித்தனர். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதில் காயம் அடைந்த சந்திப் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வில்சன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Tags :
Next Story