இளம்பெண் தற்கொலை: கணவர் வீட்டு முன்பு உறவினர்கள் திடீர் போராட்டம்
சேலத்தில் இளம்பெண் தற்கொலை கணவர் வீட்டு முன்பு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாமியார், மைத்துனரை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சேலம்,
சேலம் செவ்வாய்பேட்டை ஏ.வி.அய்யர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). இவருடைய மனைவி மோனிகா (20). கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் மோனிகா தூக்கில் பிணமாக தொங்கினார். ஆனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் மோனிகாவின் தந்தை ரவி மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மோனிகாவின் உடலை வாங்காமல் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோனிகாவின் கணவர் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சித்ரவதை தாங்க முடியாமல் மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோனிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் வெங்கடேஷ், மாமனார் பிரகாஷ் ஆகியோர் மீது செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், மோனிகாவின் சாவுக்கு காரணமான அவரது மாமியார் விஜயலட்சுமி, மைத்துனர் ஹரிஹரன் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி நேற்று மதியம் 2.30 மணிக்கு மோனிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், செவ்வாய்பேட்டையில் உள்ள வெங்கடேசின் வீட்டின் முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் அதை கேட்காமல் மோனிகாவின் மாமியார், மைத்துனரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, மோனிகா இறப்பு குறித்து சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார். எனவே, அவரது கவனத்திற்கு இந்த பிரச்சினை கொண்டு சென்று தேவைப்பட்டால் 2 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, தற்கொலைக்கு முன்பு மோனிகா எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கி உள்ளது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, மோனிகா தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. இது எனது சொந்த முடிவு ஆகும். அப்பா, அம்மாவை ரொம்ப பிடிக்கும். என்னை மன்னித்துவிடுங்கள், என்று கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story