சுப்பிரமணியசாமியை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சுப்பிரமணியசாமியை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2018 3:15 AM IST (Updated: 8 Jan 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

தேனி பங்களாமேடு பகுதியில் புதிய தமிழகம் கட்சியினர் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி,

தேனி பங்களாமேடு பகுதியில் புதிய தமிழகம் கட்சியினர் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் என்றும், விமான நிலையத்துக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்த கருத்தை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் கட்சியின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story