‘தமிழகத்தை ஆளத்தகுதியுள்ள ஒரே தலைவராக அன்புமணி உள்ளார்’ - டாக்டர் ராமதாஸ்
தமிழகத்தை ஆளத்தகுதியுள்ள ஒரே தலைவராக அன்புமணி உள்ளார் என்று பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்க.ஜோதி, காசாம்புபூமாலை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வடிவேல், மாநில துணைத்தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பால.சக்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் உணவு, உடை, வாழ்க்கை, விவசாயம், தொழில், நாகரீகம் என அனைத்திலும் வளர்ச்சி, மாற்றம் வந்துள்ள நிலையில் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மாற்றம் காணவில்லை. அதாவது பணம் வாங்கிக்கொண்டு இன்னமும் ஓட்டு போட்டுக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனின் ஓட்டுரிமையை விலை கொடுத்து வாங்குகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். சுயமாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும். யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்பதை மக்கள் முடிவு செய்யவேண்டும். பா.ம.க.வில் எல்லா சமுதாய மக்களும் இணைந்து வருகின்றனர். காரணம் மதநல்லிணக்கத்திற்கு பாடுபடும் இயக்கமாக பா.ம.க. உள்ளது. பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்னும் விஷயத்தில் பா.ம.க. உறுதியாக உள்ளது. தமிழகத்தை ஆளத்தகுதியுள்ள ஒரே தலைவராக அன்புமணி ராமதாஸ் உள்ளார். இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். அரசியலில் குதிக்கிறவர்கள் எல்லோரும் முதல்வராகிவிடலாம் என்ற எண்ணத்தில் வருகின்றனர். அவர்கள் அனைவருமே நீர்க்குமிழிகள் போலத்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அன்புமணி ராமதாசிடம் திட்டம், கொள்கை மற்றும் செயல்முறை உள்ளது. ஒரு ஆட்சி அமைக்க ஒரு தலைவனுக்கு இந்த மூன்றும் தேவை ஆகும். அந்த வகையில் அன்புமணி ராமதாசுக்கு மட்டுமே இந்த தகுதிகள் உள்ளன. 50 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது. இனியாவது தமிழகத்தை காப்பாற்றவேண்டும். அதற்கு பா.ம.க ஆட்சி அமைக்கவேண்டும். பொங்கல் பரிசு என்ற பெயரில் வெல்லம், அரிசி, கரும்பு துண்டு தருவது வேதனையாக உள்ளது. சுயமரியாதை மிக்க தமிழர்களுக்கு இதுபோன்ற இலவசங்களை கொடுத்து தன்மானத்தை விலைபேசுவதுபோல் உள்ளது. பா.ம.க ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி, மருத்துவம், விவசாய உரங்கள் போன்றவை தருவோம். சாதாரண அடித்தட்டு மக்களுக்கும் உயர் சிகிச்சை, உயர்கல்வி தருவோம். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். முன்னதாக பல்வேறு கட்சியில் இருந்து மணலூர்பேட்டை வெங்கடாசலம், சந்தப்பேட்டை சலீம் உள்ளிட்ட 100 பேர் பா.ம.க.வில் இணைந்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் அ.ப.செழியன், மு.அமுதமொழி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் சக்திவேல், மாவட்ட துணை செயலாளர்கள் சிவலிங்கம், டெல்லி சேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனி, சுடரொளிசுந்தர், திருக்கோவிலூர் நகர செயலாளர் முருகன், வக்கீல் அணி நிர்வாகிகள் சரவணக்குமார், வீராசெல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி நிர்வாகி ஆதிவிஸ்வநாதன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story