நெல்லை மாநகரில் கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில் 85 பேர் சாவு துணை போலீஸ் கமிஷனர் சுகுணாசிங் தகவல்
நெல்லை மாநகரில் கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில் 85 பேர் இறந்து உள்ளனர் என்று நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுகுணாசிங் கூறினார்.
நெல்லை,

கருத்தரங்கம்
தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடந்தது. தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கணபதிசுப்பிரமணியன் வரவேற்றார். நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுகுணாசிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாலை விதிகள்
வாகனங்களில் செல்லும்போது சாலை விதிகளை மதிக்காமல் செல்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. நாம் சாலைகள் மோசமாக இருப்பதால் தான் விபத்து ஏற்படுகிறது என்று கூறி வருகிறோம். ஆனால் நாம் சாலை விதிகளை கடைபிடித்து சென்றால் விபத்துகளை தடுக்கலாம். நான் சாலை விதிகளை கடைபிடிப்பேன் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்று செயல்பட வேண்டும். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்தும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும் சென்றால் விபத்தை தவிர்க்கலாம்.
ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு தீர்வு என்ன என்பதை யோசித்து செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்கு தீர்வு காண முடியும். மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களிடம் இருந்து மாற்றம் வரவேண்டும் என்று நினைக்க வேண்டும்.
இறப்பு குறைவு
கடந்த 2016-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2017-ம் ஆண்டில் நெல்லை மாநகரில் சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை குறைவு. 2016-ம் ஆண்டு நடந்த விபத்துகளில் 111 பேர் இறந்து உள்ளனர். 2017-ம் ஆண்டில் 85 பேர் இறந்து உள்ளனர். போக்குவரத்து போலீசாரின் தீவிர நடவடிக்கை காரணமாக தான், விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை குறைந்து உள்ளது. புத்தாண்டு அன்று வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 25 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு துணை போலீஸ் கமிஷனர் சுகுணாசிங் கூறினார்.
கருத்தரங்கில், மாவட்ட அறிவியல் மைய அலுவலர் நவராம்குமார், போக்குவரத்து ஆய்வாளர் செங்கோட்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொன்மொழி எழுதிய கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Tags :
Next Story