வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து ஆடம்பர வீடு கட்டிய தாசில்தார் பணியிடை நீக்கம்
கோட்டயத்தை அடுத்துள்ள பாலாவில் சிறப்பு தாசில்தாராக பணி செய்து வந்தவர் ஷைனி செரியான்.
கோட்டயம்,
கோட்டயத்தை அடுத்துள்ள பாலாவில் சிறப்பு தாசில்தாராக பணி செய்து வந்தவர் ஷைனி செரியான். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததுடன், பாலா நகரில் ஆடம்பர வீடு கட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து ஆடம்பர வீடு கட்டியது நிரூபணமானது. இதுதொடர்பான அறிக்கை வருவாய்த்துறை இணை செயல்அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், ஷைனி செரியான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story