தற்காலிக டிரைவர் ஓட்டி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது


தற்காலிக டிரைவர் ஓட்டி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது
x
தினத்தந்தி 8 Jan 2018 4:15 AM IST (Updated: 8 Jan 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறில் தற்காலிக டிரைவர் ஓட்டி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

வாய்மேடு,

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நாகை மாவட்டத்திலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பஸ்களை இயக்குவதற்காக தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை நியமித்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அகிலன் என்பவர் தலைஞாயிறில் இருந்து உம்பளச்சேரி வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் அரசு பஸ்சில் தற்காலிக டிரைவராக நியமிக்கப்பட்டார்.

விபத்து

இந்த நிலையில் நேற்று காலை தலைஞாயிறில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு பஸ்சை ஓட்டி சென்றார். உம்பளச்சேரி மெயின்ரோட்டில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அகிலன் ஓட்டி வந்த அரசு பஸ், அந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. 

Next Story