போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம் அமைச்சர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 4-வது நாளாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பஸ் நிலையங்களில் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆய்வு நடத்தினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. நகர்ப்புறங்களுக்கு ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தர்மபுரி டவுன் பஸ் மற்றும் புற நகர் பஸ் நிலையங்களில் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். பஸ்கள் குறைவான அளவிலேயே இயக்கப்பட்டதால் அவற்றில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரி டவுன் பஸ்நிலையம் மற்றும் புறநகர் பஸ்நிலையம் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் விவேகானந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், உதவி கலெக்டர் ராமமூர்த்தி, அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் கஜேந்திரன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story