ஏனாமில் மக்கள் கலைவிழா–மலர் கண்காட்சி நாராயணசாமி பங்கேற்பு


ஏனாமில் மக்கள் கலைவிழா–மலர் கண்காட்சி நாராயணசாமி பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Jan 2018 4:07 AM IST (Updated: 8 Jan 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

ஏனாமில் நடைபெறும் மக்கள் கலைவிழாவினை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி அரசு முறை பயணமாக ஏனாம் சென்றுள்ளார். அங்கு அவர் ஆதிதிராவிட நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான மானியதொகைகளை வழங்கினார். மேலும் சமூக நலத்துறை மூலம் முடி திருத்துபவர்களுக்கு தொழிற்கருவிகளையும் வழங்கினார்.

மேலும் ராஜீவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 49 குடும்பங்களுக்கு நிதியுதவி, சுய உதவி குழுக்களுக்கு மானிய உதவிகள் ஆகியவற்றை வழங்கினார். கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் புனரமைப்பு பணிகள், சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் மீன் ஏலக்கூடம் கட்டுவதற்கான பணிகள் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

16–வது ஏனாம் மக்கள் கலை விழாவினையும், 19–வது காய்கனி, மலர் கண்காட்சியையும் அவர் தொடங்கிவைத்து பார்வையிட்டார். அதுமட்டுமல்லாமல் ஏனாமில் ஜிப்மர் மருத்துவமனையின் கலந்தாய்வு பிரிவு ஒன்றினை தொடங்குவதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

ஏனாம் பகுதி திறந்த வெளி கழிப்பிடமில்லா பகுதி என்றும் அவர் அறிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story