இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி


இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி
x
தினத்தந்தி 8 Jan 2018 12:21 PM IST (Updated: 8 Jan 2018 12:21 PM IST)
t-max-icont-min-icon

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அனுபவம் வாய்ந்த நான்-எக்சிக்யூட்டிவ் பணியாளர்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ந்தியாவின் மாபெரும் பொதுத் துறை வர்த்தக நிறுவனமும், உலகின் முன்னணி 500 நிறுவனங்களில் ஒன்றுமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அனுபவம் வாய்ந்த நான்-எக்சிக்யூட்டிவ் பணியாளர்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தேர்வு பெறுவோர், பீகார் மாநிலம் பரானியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியமர்த்தப்படுவர்.

பணிகள் மற்றும் பணியிட எண்ணிக்கை விவரம்:

ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்- IV (புரொடக்‌ஷன்)- கெமிக்கல் பிரிவு- 37

ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்- IV- (பி அண்ட் யூ)-பாய்லர் -பி அண்ட் யூ பிரிவு- 3

ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்- IV (பி அண்ட் யூ)-டர்பைன்- பி அண்ட் யூ பிரிவு- 3

ஜூனியர் கண்ட்ரோல் ரூம் ஆப்பரேட்டர்- IV -பி அண்ட் யூ பிரிவு- 3

ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்- IV -எலக்ட்ரிக்கல் பிரிவு- 5

ஜூனியர் குவாலிட்டி கண்ட்ரோல் அனலிஸ்ட்- IV -குவாலிட்டி கண்ட்ரோல் பிரிவு- 4

ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்- IV -பயர் அண்ட் சேப்டி பிரிவு- 1

ஜூனியர் மெட்டீரியல்ஸ் அசிஸ்டன்ட்- IV -மெட்டீரியல்ஸ் பிரிவு- 1

ஜூனியர் நர்சிங் அசிஸ்டன்ட்- IV ஸ்டாப் நர்ஸ்- 1

வயது வரம்பு:

பொதுப் பிரிவு விண்ணப்பதாரர் களுக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 26 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட், ஜூனியர் கண்ட்ரோல் ரூம் ஆப்பரேட்டர், ஜூனியர் மெட்டீரியல்ஸ் அசிஸ்டன்ட் பணிகளுக்கு அந்தந்தப் பிரிவுகளில் 3 ஆண்டு கால டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் குவாலிட்டி கண்ட்ரோல் அனலிஸ்ட் பணிக்கு, பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல் அல்லது தொழிலக வேதியியல், கணிதப் பாடங்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்- பயர் அண்ட் சேப்டிக்கு அதற்குரிய படிப்பும், ஜூனியர் நர்சிங் அசிஸ்டன்ட் பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங் அல்லது டிப்ளோமா படிப்பும் பயின்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.iocrefrecruit.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண் டும். 20.1.2018 வரை விண்ணப்பிக்க முடியும். 

Next Story