ரகசிய எழுத்துக்கள்


ரகசிய எழுத்துக்கள்
x
தினத்தந்தி 8 Jan 2018 1:01 PM IST (Updated: 8 Jan 2018 1:01 PM IST)
t-max-icont-min-icon

மம்மிகள் வைக்கப்பட்டுள்ள பெட்டகங்களில் ரகசிய எழுத்துக்கள்...

பிரமீடுகளில் உள்ள ‘மம்மி’க்கள் குறித்து இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல் கலைக்கழக கல்லூரியின் தொல்லியல் துறை விஞ்ஞானி ஆடம் ஜிப்சன் குழுவினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இங்கிலாந்தில் கென்ட் பகுதியில் உள்ள சிட்டிஸ்டன் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கும் ‘மம்மி’ யை இவர்கள் நவீன எக்ஸ்-ரே மூலம் படம் பிடித்து ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த மம்மிக்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பெட்டகங்களில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான காகிதங்கள் இருந்தன என்றும், அதில் பழங்கால எழுத்துக்களில் சில தகவல்கள் எழுதப்பட்டு இருந்தது என்றும் தெரியவந்தது. குறிப்பாக அந்த மம்மியின் பெயர், மற்றும் அவரது சிறப்புகள் அதில் எழுதப்பட்டுள்ளது.

இதுவரை மம்மிகள் மீது நடைபெற்ற ஆய்வுகளில் இந்த தகவல் வெளியாகி இருப்பது இதுவே முதல்தடவை. மம்மிகள் உள்ள பிரமீடுகளில் சுவர்களில் ஏற்கனவே ஓவியங்கள் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இப்போது மம்மிகள் வைக்கப்பட்டுள்ள பெட்டகங்களிலும் ரகசிய எழுத்துக்கள் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஈடுபடுத்தியுள்ளது. 

Next Story