புத்தாண்டில் ‘வாட்ஸ் அப்’ பயன்பாடு

புத்தாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் 75 பில்லியன் புத்தாண்டு செய்திகள் பரிமாறப்பட்டன.
2018 புத்தாண்டு பிறக்கும் போது உலகம் முழுவதும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துச்செய்திகளை பரிமாறிக்கொண்டனர்.
19-ம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். தற்போது செல்பேசி யுகம் என்பதால் எஸ்.எம்.எஸ். மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்த்துக்களை தெரிவித்தவர்கள், இப்போது வாட்ஸ் அப் பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் 75 பில்லியன் புத்தாண்டு செய்திகள் பரிமாறப்பட்டன. இதில் 13 பில்லியன் படங்கள், 5 பில்லியன் வீடியோக்கள் அடங்கும். அதேநேரத்தில் இந்தியாவில் 20 பில்லியன் வாழ்த்துக்கள் வாட்ஸ் அப் மூலம் பரிமாறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான வாழ்த்துக்கள் நள்ளிரவு மணி 11.59 முதல் 12.01 வரை அனுப்பப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் பல கோடி மக்கள் பயன்படுத்தியதால் வாட்ஸ் அப் செயல்பாடு சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story