அனைத்து மாநிலங்களிலும் விரைவில் பா.ஜனதா ஆட்சி மலரும், பிரகலாத்மோடி பேட்டி


அனைத்து மாநிலங்களிலும் விரைவில் பா.ஜனதா ஆட்சி மலரும், பிரகலாத்மோடி பேட்டி
x
தினத்தந்தி 9 Jan 2018 5:00 AM IST (Updated: 9 Jan 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்துக்கு பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் பிரகலாத் மோடி நேற்று வருகை தந்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்துக்கு பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் பிரகலாத் மோடி நேற்று வருகை தந்தார். பின்னர் ராமநாதசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை, கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் சாமி– அம்பாள் சன்னதிகளில் சாமிதரிசனம் செய்த அவர், 3–ம் பிரகாரத்தை பார்வையிட்டு செல்பி, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் பிரகலாத் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:–

 இந்தியாவில் பா.ஜனதா அலை வீசுகிறது. குஜராத் வெற்றியை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் விரைவில் பா.ஜனதா ஆட்சி மலரும். இந்து கோவில்களில் முக்கியமான ராமேசுவரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மனஅமைதியை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பா.ஜனதா மாவட்ட தலைவர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story