பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது
பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி மலைப்பாதை வழியாக பெங்களூருவில் இருந்து குடியாத்தத்துக்கு மைதா மாவு லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.
மலையின் 2-வது வளைவில் திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மலைப்பாதையில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்தை விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் படுகாயம் அடைந்த ராமச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே மலைப்பாதையில் 2 நாட்களுக்கு முன்பு செல்போன் நிலையத்துக்கு எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஏற்றி வந்த லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அரி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story