சாக்கடை கால்வாயை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சாவு
அடுக்குமாடி குடியிருப்பில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சாவு.
பெங்களூரு,
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதால் 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது. பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என சதீஷ் ரெட்டி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகே சோமசுந்தரபாளையாவில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அருகில் ஓடும் பாதாள சாக்கடையில் கலக்கிறது. இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாதாள சாக்கடைக்கு செல்லாமல் அந்தப்பகுதியிலேயே தேங்கி வந்ததாக தெரிகிறது. இதனால் அங்கு வசிப்பவர்கள் சாக்கடை கால்வாயை அவ்வப்போது தொழிலாளர்கள் மூலம் சுத்தம் செய்து வந்துள்ளனர்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியை கைகொண்டனஹள்ளியை சேர்ந்த தொழிலாளியான நாராயணசாமி (வயது 56) என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். நேற்றுமுன்தினம் காலையில் குடியிருப்பில் உள்ள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய நாராயணசாமி சென்றார். அவருடன் சோமசுந்தரபாளையாவை சேர்ந்த தொழிலாளிகளான சீனிவாஸ்(52), மாதேகவுடா(40) ஆகியோரும் சென்றிருந்தார்கள். காலை 9 மணியளவில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியை 3 தொழிலாளர்களும் தொடங்கினார்கள்.
குடியிருப்பில் உள்ள சாக்கடை கால்வாய் மேலே போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகளை அகற்றிவிட்டு கால்வாயை சுத்தம் செய்ய முதலில் நாராயணசாமி உள்ளே இறங்கியதாக தெரிகிறது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. அவரை சீனிவாசும், மாதேகவுடாவும் நீண்ட நேரம் அழைத்து பார்த்தும் எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசும், மாதேகவுடாவும் சாக்கடை கால்வாய்க்குள் இறங்கினார்கள். ஆனால் அவர்களும் சாக்கடை கால்வாய்க்குள் இருந்து வெளியே வரவில்லை.
இதை குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் பார்த்தார். இதுபற்றி அவர் பண்டேபாளையா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது 3 தொழிலாளர்களும் சாக்கடை கால்வாய்க்குள் இருப்பதை உறுதி செய்தார்கள். மேலும் அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுத்தார்கள். அத்துடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படைவீரர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.
தீயணைப்பு படைவீரர்கள், சாக்கடை கால்வாயில் இருந்து 3 தொழிலாளர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்தார்கள். பின்னர் 3 மணிநேர போராட்டத்தை தொடர்ந்து கால்வாய்க்குள் இருந்து 3 தொழிலாளர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா விசாரணை நடத்தினார்.
சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணியில், நாராயணசாமிக்கு மட்டுமே அனுபவம் இருந்ததாகவும், மற்ற 2 பேருக்கும் போதிய அனுபவம் இல்லாத காரணத்தாலும், பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் கால்வாய்க்குள் இறங்கியதால் விஷவாயு தாக்கியதாலும் 3 தொழிலாளர்களும் மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்து உள்ளது.
இதற்கிடையே, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர், அப்பகுதியை சேர்ந்தவர்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு திரண்டு வந்தார்கள். அப்போது அவர்கள், சாக்கடை கால்வாயை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது, தொழிலாளர்களுக்கு அருகில் குடியிருப்புவாசிகள் யாரும் இல்லை என்றும், இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு குடியிருப்பு வாசிகள் தாமதமாக தான் தகவல் கொடுத்தனர் என்றும் குற்றம்சாட்டினார்கள். மேலும் பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, குடியிருப்புவாசிகள் தான் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
முன்னதாக இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் சென்று பார்வையிட்டார். மேலும் அவர் சம்பவம் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார். அதுபோல, சதீஷ் ரெட்டி எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் பலியான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு சதீஷ் ரெட்டி எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார். மேலும் அவர், 3 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து பண்டேபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாக்கடை கால்வாயை சுத்தம் செய்தபோது 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story