மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
மாதவரத்தில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம்,
மாதவரம் பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகர் ஏ பிளாக்கைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 32). சென்னை போரூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி கேரள மாநிலத்தை சேர்ந்த பிரியா (30). இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஷாலினி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரியா, தனது கணவரை பிரிந்து கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கிருஷ்ணன் வீட்டுக்கு வருமாறு கூறினார். ஆனால் அதற்கு பிரியா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை கிருஷ்ணனின் நண்பர் வரதன் என்பவர் அவரை தேடி வீட்டுக்கு சென்றார்.
அப்போது வீட்டில் கிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மாதவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த கிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story