கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு மும்பை தம்பதி கடிதம்


கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு மும்பை தம்பதி கடிதம்
x
தினத்தந்தி 10 Jan 2018 2:59 AM IST (Updated: 10 Jan 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு குடியரசு தலைவருக்கு மும்பை தம்பதி கடிதம் எழுதி உள்ளனர்.

மும்பை,

மும்பை சர்னி ரோடு, தக்குர்டுவார் பகுதியில் வசித்து வருபவர் நாராயண் (வயது 86). மாநில போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி இராவதி (79). இவர் பள்ளியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. எனவே தற்போது தனியாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த தம்பதி குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் தம்பதி தங்களை கருணை கொலை செய்ய அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளனர்.

கருணை கொலைக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ள தம்பதி தற்போது நல்ல உடல்நலத்துடன் தான் உள்ளனர். எனினும் வரும்காலத்தில் தம்பதிகள் இருவரும் தங்களுக்கு எதாவது நோய் பாதிப்பு ஏற்பட்டு இதனால் மற்றவர்களுக்கு அவர்கள் தொந்தரவாக இருந்து விடுவோமோ என நினைத்து கருணை கொலை செய்ய அனுமதி கேட்டுள்ளனர்.


Next Story