பறவை காய்ச்சலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை
கர்நாடக தலைநகர் பெங்களூருவை அடுத்த தசராஹல்லி கிராமத்தில் பறவை காய்ச்சல் பரவுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
மும்பை,
அண்டை மாநிலமான மராட்டியத்தில் பறவை காய்ச்சலை தடுக்க போதிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டது.
மேலும், கர்நாடகாவில் இருந்து மராட்டியத்துக்கு கொண்டு வரப்படும் கோழிகளின் ரத்த மாதிரிகளை பரிசோதிக்குமாறு அதிகாரிகளை மாநில அரசு கேட்டுக்கொண்டது. அதோடு, மராட்டியத்தில் உள்ள பண்ணைகளில் வளரும் பறவைகளை பாதுகாக்க போதிய மருந்துகளை தெளிக்குமாறு பண்ணை மேலாளருக்கு உத்தரவிடப்பட்டது.
பண்ணைத்தொழில் வாயிலாக மட்டும் ஆண்டுக்கு ரூ.700 கோடி வரை வருவாய் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story