அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் இந்துத்துவாவை அனுசரிக்கிறோம்
அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் இந்துத்துவாவை நாங்கள் அனுசரிக்கிறோம் என்று பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் தனது மாநில சாதனைகள் பற்றி இங்கே பேசட்டும். அத்தகைய சாதனைகள் கர்நாடகத்தில் நடக்கவில்லை என்று சொல்லட்டும். அதை நாங்கள் எதிர்க்க மாட்டோம். அவருடைய மாநிலத்தில் சுகாதாரத்துறையில் போதிய வசதிகள் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 40-க்கும் அதிகமான குழந்தைகள் மரணம் அடைந்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருந்த நிலையில் அந்த ஆவணங்கள் தீப்பற்றி எரிந்தன. இத்தகைய பல்வேறு குற்றச்சாட்டுகளை தோளில் சுமந்து கொண்டு, இன்னொரு மாநிலத்தை பற்றி குறை கூறுவது சரியா?. பசுவதை தடை சட்டம் பற்றி அவர் பேசுகிறார். கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. அதை எங்கள் அரசு பின்பற்றுகிறது.
விவசாயிகள் தற்கொலை பற்றி யோகிஆதித்யநாத் பேசுகிறார். இந்த தற்கொலைக்கு கடன் தான் காரணம். அதனால் நாங்கள் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். தேசிய வங்கிகளில் உள்ள கடனை தள்ளுபடி செய்யுமாறு நாங்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம். அதை பற்றி பிரதமர் கண்டுகொள்ளவில்லை.
யோகிஆதித்யநாத், மோடிக்கு அழுத்தம் கொடுத்து தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யட்டும். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ரூ.72 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் செய்த பணிகளில் ஏதாவது குறை இருந்தால் அதை அவர் சொல்லட்டும். நாங்கள் விவசாயம் உள்பட பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்துள்ளோம்.
அதுபற்றி பேசாமல் பசுவதை, மாட்டு இறைச்சி சாப்பிடுவது, இந்துத்துவா பற்றி அவர் பேசுகிறார். அவர் எந்த இந்துத்துவாவை பின்பற்றுகிறார். அது கோட்சே இந்துத்துவா. நாங்கள் மென்மையான இந்துத்துவாவை பின்பற்ற தொடங்கி இருப்பதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். நாங்கள் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும் இந்துத்துவாவை அனுசரிக்கிறோம்.
இந்துத்துவா என்றால் மதவாதம், கொலை செய்வதா? எங்கள் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கோவிலுக்கு சென்றால் அதை பெரிய அளவில் பேசுகிறார்கள். இந்துத்துவா உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தனர்? ஆதார் தகவல்கள் கசிவதாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்கு போட்டுள்ளனர். முதலில் ஆதார் வேண்டாம் என்று கூறினர். இப்போது எல்லாவற்றுக்கும் ஆதார் வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது.
வங்காளதேசத்தை சேர்ந்த 2 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக எடியூரப்பா சொல்கிறார். இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து பா.ஜனதாவினர் நீக்குகிறார்கள். இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
பிணத்தை வைத்து அரசியல் செய்வது எங்களின் கலாசாரம் இல்லை. தீபக்ராவ், பசீர் ஆகியோர் கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.”
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Related Tags :
Next Story