ஸ்ரீவைகுண்டத்தில் பிளஸ்–2 மாணவர் சாவு பள்ளி வகுப்பறையில் திடீரென வலிப்புநோய் வந்ததால் பரிதாபம்
ஸ்ரீவைகுண்டத்தில், பள்ளி வகுப்பறையில் இருந்த பிளஸ்–2 மாணவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்ததால், பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டத்தில், பள்ளி வகுப்பறையில் இருந்த பிளஸ்–2 மாணவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்ததால், பரிதாபமாக உயிரிழந்தார்.
பிளஸ்–2 மாணவர்ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் திருப்பூரில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளைய மகன் கருத்தப்பாண்டி (வயது 17). இவர் வெள்ளூரில் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து, ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார். அவருடைய பெற்றோர், அண்ணன், அக்காள் திருப்பூரில் வசித்து வருகின்றனர். கருத்தப்பாண்டிக்கு சிறுவயதில் இருந்தே வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது.
வலிப்புநோய்நேற்று மதியம் 12.30 மணி அளவில் பள்ளிக்கூடத்தில் பாடம் படித்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே கருத்தப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீவைகுண்டம் போலீசார், வலிப்பு நோயால் இறந்த அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டது.