ஊட்டியில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
கூடலூரில் பிரிவு 17 நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
ஊட்டி,
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், முன்னாள் மாவட்ட செயலாளர் பத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகை போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பால கிருஷ்ணன் கூறியதாவது:-
கூடலூர், பந்தலூர், ஊட்டி ஆகிய தாலுகாக்களில் 10 ஆயிரம் பேர் பல ஆண்டுகளாக அரசு மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு நிலப்பட்டா மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவில்லை. இதனால் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல், அவர்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இருட்டிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
கூடலூரில் பிரிவு 17 நிலத்தில் தங்களது விவசாய நிலத்திற்கு பட்டா அல்லது அனுபோக சான்றிதழ் இல்லாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பயிரிடுவதற்கு விவசாய கடன், வங்கி கடன் போன்றவை பெற முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மசினகுடி பகுதியில் அரசு நிலத்தில் குடியிருந்ததாக கூறி, 84 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு, அவர்கள் வசித்து வந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து, பிரச்சினைகளை விளக்கி கூறினோம். அவர் எங்களது பிரச்சினைகளை கேட்டறிந்து, தீர்வு காணுவதற்கு தமிழக அரசு முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளது. வனத்துறை சார்ந்த வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருவதால், நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வனப்பகுதிகளை சார்ந்து வாழ்ந்த ஆதிவாசி மக்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி பெற்று, அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த பிரச்சினைகள் குறித்து தலைமை செயலாளர் கவனத்துக்கு கொண்டு சென்று, தமிழக முதல்-அமைச்சருடன் கலந்தாலோசித்து தீர்வு காண உரிய முயற்சி எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உறுதியளித்தார். எனவே, அரசு எங்களது கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story