சோழவந்தான் அருகே பள்ளி வாகனம் மோதி சிறுவன் பலி


சோழவந்தான் அருகே பள்ளி வாகனம் மோதி சிறுவன் பலி
x
தினத்தந்தி 11 Jan 2018 4:35 AM IST (Updated: 11 Jan 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே பள்ளி வாகனம் மோதியதில் 3 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பவுன்ராஜ். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 5 வயதில் ரோசினி என்ற மகளும், 3 வயதில் குகன் என்ற மகனும் உண்டு.

நேற்று காலை பவுன்ராஜின் வீட்டருகே ரோசினி படிக்கும் பள்ளியின் வேன் வந்து நின்றது. ரேகா அந்த வேனில் ரோசினியை ஏற்றி விட்டார். அந்த வேன் அங்கிருந்து கிளம்பியபோது அந்தப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குகன் மீது மோதியது. இதில் வேன் சக்கரத்தில் சிக்கி குகன் தலைநசுங்கி பரிதாபமாக பலியானான். குகனின் உடலைப் பார்த்து அவனது பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இது பற்றிய புகாரின் பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்புளிச்சான்பட்டியை சேர்ந்த டிரைவர் சம்பத்தை (வயது 34) கைது செய்தனர்.


Related Tags :
Next Story