விபத்தில் பலியான சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
திருப்பத்தூர் அருகே தனியார் பஸ் மோதி சிறுமி பலியான சம்பவத்தில் தனியார் பஸ்சின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் செல்லும் ரோட்டில் உள்ள குரிசிலாப்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் இவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது தம்பி இளையராஜா என்ஜினீய ராவார். நேற்று முன்தினம் இளையராஜா, தனது அண்ணன் சவுந்தரபாண்டியன் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது சவுந்தரபாண்டியனின் மகள்கள் அபிநயா (வயது 8), ஜோதிஸ்ரீ ஆகியோரை அங்குள்ள கடைக்கு இளையராஜா அழைத்துச்சென்றார். அங்கு தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு அவர் குழந்தைகளுடன் சாலையை கடந்தார்.
அப்போது திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி சென்ற பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் அபிநயா சம்பவ இடத்திலேயே பலியானாள். மேலும் ஜோதிஸ்ரீ மற்றும் இளையராஜா ஆகியோர் படுகாயம் அடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அபிநயாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக இதே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் படுகாயம் அடைந்த இளையராஜாவின் ஒரு கால் அகற்றப்பட்டது. நேற்று அபிநயாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்க எடுத்து வரப்பட்டது.
ஆனால் உடலை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பழனி (குரிசிலாப்பட்டு), ஸ்ரீதர் (திருப்பத்தூர் டவுன்), உலகநாதன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.
அவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் அதிவேகமாக சென்று வருகிறது. பல முறை எச்சரித்தும் வேகத்தை குறைக்காமலேயே அந்த பஸ் இயக்கப்படுகிறது. எனவே அந்த பஸ் இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மேலும் விபத்து ஏற்படுத்திய பஸ்சின் உரிமையாளரை இங்கு வரச்செய்ய வேண்டும். இளையராஜாவுக்கு கால் துண்டிக்க வேண்டிய நிலை இந்த விபத்தால் ஏற்பட்டுள்ளது. அவர் என்ஜினீயராவார். அவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் தான் நாங்கள் அபிநயாவின் உடலை வாங்குவோம்” என்றனர்.
அதற்கு போலீசார் கூறுகையில், “விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சின் உரிமத்தை ரத்து செய்வதற்கான அதிகாரம் போலீசாருக்கு இல்லை. உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுங்கள்” என கேட்டுக்கொண்டனர். நீண்ட நேர சமரசத்துக்கு பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அபிநயாவின் உடலை பெற்றுச்சென்றனர்.
இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story