நாய் பிடிக்கும் வண்டியில் ஏறி பயணம் செய்த மக்கள்
பஸ்கள் வராததால் நாய் பிடிக்கும் வண்டியில் ஏறி பயணம் செய்த மக்கள் விரக்தி அடைந்தனர்.
சென்னை,
போக்குவரத்து ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தலைநகர் சென்னையில் அவல சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. இதுகுறித்து சம்பவத்தை பார்த்த ஒருவர் கூறியதாவது:-
சென்னை அரும்பாக்கம் பகுதியில் பஸ்சுக்காக நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருந்தனர். அந்த வழியாக வந்த பஸ்கள் அனைத்தும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. டிரைவர்களும் பஸ்சை நிறுத்தாமல் சென்றனர். இதனால் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் விரக்தி அடைந்தனர்.
இந்தநிலையில் அந்த வழியாக வந்த பெருநகர சென்னை மாநகராட்சி நாய் பிடிக்கும் வண்டியை நிறுத்தினர். வண்டியில் நாய்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த வண்டியை ஓட்டி வந்த டிரைவரிடம் தங்களை போகிற வழியில் இறக்கி விட்டு செல்லுமாறு வேண்டுகோள் வைத்தனர். அதற்கான கட்டணமும் தருவதாகவும் கூறினர். இதையடுத்து அந்த டிரைவர் அவர்களை வண்டியில் ஏற்றி அழைத்து சென்றார்.
தெருநாய்களை பிடிக்கும் நாய் வண்டியில் மக்கள் ஏறிய காட்சியை கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story