அரசு பொது மருத்துவமனையில் விபத்து காயம் அவசர சிகிச்சை மையம்


அரசு பொது மருத்துவமனையில் விபத்து காயம் அவசர சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 12 Jan 2018 4:45 AM IST (Updated: 12 Jan 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விபத்து காயம் மற்றும் அவசர கால சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும், சாலை விபத்துகளில் விலைமதிப்பற்ற உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள விபத்து காயம் மற்றும் அவசர கால சிகிச்சை மையத்தில் 29 படுக்கைகள் உள்ளன.

அவசரகால மருத்துவர்கள், சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் 24 மணி நேரமும் செயல்படுவார்கள். இத்தகைய விபத்து காயம் அவசர சிகிச்சை மையங்கள் வெளிநாடுகளில் மட்டுமே காண முடிந்தது. ஆனால் தற்போது தமிழக அரசின் முயற்சியால் உலகத்தரம் வாய்ந்த அவசர சிகிச்சை மையங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story