காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்
கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ஈரோடு,
கோபி அருகே உள்ள பாரியூரில் அமைந்திருக்கும் கொண்டத்து காளியம்மன் ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்து வந்தன. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் பக்தர்கள் குண்டம் அமைக்க காணிக்கையாக வழங்கிய கரும்புகள் (விறகுகள்) கொண்டு வரப்பட்டன. இதிலிருந்து சுமார் 5 டன் அளவுக்கு கரும்புகள் குண்டம் அமைக்கும் பகுதியில் அடுக்கப்பட்டன. இரவு 10 மணி அளவில் குண்டம் முன்பு பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் முடிந்ததும் கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் பற்றவைக்கப்பட்டது.
குதிரை துளுக்கியது
கரும்புகள் எரிந்து அதிகாலை 4 மணி அளவில் தணலாக மாறியது. அதைத்தொடர்ந்து குண்டத்தை சமன் செய்யும் பணியில் பொறுப்பாளர்கள் (வீரமக்கள்) ஈடுபட்டனர். நீண்ட பச்சை மூங்கில் தடிகளால் தணல்கள் அடித்து நொறுக்கப்பட்டு சுமார் 60 அடி நீளம், 4 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. குண்டத்தில் பனை ஓலையை விசிறிபோன்று பயன்படுத்தி பணியாளர்கள் வீசினார்கள். அதிகாலை 5 மணி அளவில் பக்தர்கள் இறங்குவதற்கு குண்டம் தயாரானது.
இதற்கிடையே அதிகாலை 3.30 மணி அளவில் குதிரை துளுக்கும் நிகழ்ச்சி நடந் தது. கோவில் வளாகத்தில் உள்ள சக்தி வல்ல கணபதி சன்னதியின் முன்பு குதிரை துளுக்கியது. உடனடியாக கோவில் பூசாரிகள் மற்றும் நிர்வாகிகள் படைக்கலத்துடன் புறப்பட்டனர். படைக்கல ஊஞ்சலாட்டம் முடிந்ததும், குதிரையை கோவிலுக்குள் அழைத்துச்சென்று சிறப்பு பூஜை செய்தனர்.
அம்மன் அழைப்பு
அப்போது அம்மனின் அனுமதி பூ கேட்கப்பட்டது. கொண்டத்து காளியம்மனின் அனுமதி கிடைத்ததும் அங்கிருந்து தொட்டியபாளையம் பிரிவுநோக்கி ஊர்வலம் நடந்தது. அங்கு அம்மன் அழைப்பு பூஜை நடந்தது. பின்னர் அம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் தேரில் வீதி உலா வந்தார். அப்போது அம்மனை பக்தர்கள் பயபக்தியுடன் வரவேற்றனர். தேர் கோவிலின் அருகே உள்ள நந்தவனத்துக்கு சென்று அங்கிருந்து மீண்டும் கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
காலை 5.30 மணி அளவில் தலைமை பூசாரி லோகநாதன் தலைமையில் பூசாரிகள் குண்டத்தை வந்து அடைந்தனர். பின்னர் மீண்டும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அம்மன் சன்னதியில் இருந்து தீப்பந்தம் போன்ற விளக்குத்திரி பற்ற வைக்கப்பட்டு கோவில் தீப கம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது. கம்பத்தில் தீபத்துக்கான எண்ணெய் நிரப்பிய மண்கலசம் வைக்கப்பட்டது, கோவில் மிராசுதாரர்கள் பூசாரியிடம் இருந்து தீபத்திரியை பெற்று கம்பத்தில் தீபம் ஏற்றினார்கள்.
பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள்
மலர் மாலை, மலர் கிரீடத்துடன் வந்த தலைமை பூசாரி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தார். பின்னர் கைகளால் குண்டத்தில் இருந்து தீக்கனல்களை எடுத்து 3 முறை வீசினார். அப்போது கூடி இருந்தவர்கள் பக்தி கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து தலைமை பூசாரி குண்டத்தில் இறங்கி தீமிதித்தார். அவரைத்தொடர்ந்து ஏராளமானவர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.
திருப்பூர் சத்தியபாமா எம்.பி., ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் மனைவி ஸ்ரீவித்யா சிவக்குமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் குண்டத்தில் இறங்கினார்கள். ஏராளமானவர்கள் கைக்குழந்தைகளுடன் இறங்கி தீமிதித்தனர். அப்போது பரவசத்துடன் பக்தர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதுபோல் ஏராளமான சிறுவர் -சிறுமிகள், இளம் பெண்கள் பக்திபரவசத்துடன் குண்டம் இறங்கினார்கள். திருநங்கைகளும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் குண்டம் இறங்கி கொண்டத்து காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பல்லாயிரம் பேர்
குண்டம் இறங்க பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே கோவில் வளாகத்தில் காத்திருந்தனர். இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. காலை 8 மணி அளவில் கோவிலில் இருந்து பா.வெள்ளாளபாளையம் பிரிவுவரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கினார்கள். விழாவையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜவேலு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வம், சண்முகம், இன்ஸ்பெக்டர்கள் கதிர்வேல், ரமேஷ், கண்ணன், ரவி மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொண்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
விழாவில் கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன், தாசில்தார் பூபதி, கோவில் உதவி ஆணையாளர் ப.முருகையா, செயல் அதிகாரி ந.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்த்திருவிழா
விழாவையொட்டி கொண்டத்து காளியம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இன்று (வெள்ளிக்கிழமை) தேர்த்திருவிழா நடக்கிறது. மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தேர் நிலைக்கு வருகிறது. தொடர்ந்து இரவு மலர்ப்பல்லக்கு வீதி உலா நடக்கிறது.
14-ந் தேதி கோபியில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 15-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் கோபியில் மஞ்சள் நீர் விழா நடக்கிறது. 17 -ந் தேதி, 18-ந் தேதிகளில் புதுப்பாளையத்திலும், 19-ந் தேதி, 20-ந் தேதி நஞ்சகவுண்டன்பாளையத்திலும் மஞ்சள் நீர்விழா நடைபெறும். அன்று இரவு அம்மன் கோவில் வந்தடையும் நிகழ்வு நடக்கிறது. அதைத்தொடர்ந்து மறுபூஜையுடன் திருவிழா நிறைவடையும்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

Related Tags :
Next Story