பொங்கல் பண்டிகையையொட்டி சிதம்பரம் பகுதியில் கரும்பு அறுவடை செய்யும் பணி மும்முரம்
பொங்கல் பண்டிகையையொட்டி சிதம்பரம் பகுதியில் கரும்பு அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவை வாகனங்கள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சிதம்பரம்,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் புதுப்பானையில் பொங்கலிடும் மரபிற்காக மண் பானைகள் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் பொங்கலுக்கு பெயர் போன பன்னீர் கரும்புகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக கரும்புகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரும்பு அறுவடை
அந்த வகையில் சிதம்பரம் அருகே மேலக்குடி, கடவாச்சேரி, பழையநல்லூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்திருந்தனர். நன்கு செழித்து வளர்ந்த இந்த கரும்புகளை விவசாயிகள் தற்போது அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அதனை கட்டுகளாக கட்டி விற்பனை செய்கின்றனர். 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300-க்கு விற்கப்படுகிறது. பின்னர் அதனை மினிலாரி, லாரி, டிராக்டர்களில் கடலூர் மட்டுமின்றி சென்னை, சீர்காழி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு சில வியாபாரிகள், நேரடியாக கரும்பு தோட்டத்திற்கு வந்து விவசாயிகளிடம் விலைபேசி கரும்புகளை வாங்கிச் செல்கிறார்கள்.

Related Tags :
Next Story