தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் நின்றிருந்த தனியார் பஸ் மீது மோதல் 5 பேர் படுகாயம்
சேலம் அருகே தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் நின்றிருந்த தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 8-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள 13 பணிமனைகளில் இருந்தும் வழக்கம்போல 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட வில்லை.
தற்காலிக மாற்று டிரைவர்கள் மூலம் நேற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. முண்டியடித்து கொண்டு பஸ்களில் பயணிகள் ஏறி, சீட் பிடிக்க கடும் சிரமப்பட்டனர்.
பஸ் விபத்தில் சிக்கியது
இந்த நிலையில் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாழப்பாடிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை தற்காலிக டிரைவர் மணிகண்டன் ஓட்டிச்சென்றார். அயோத்தியாப்பட்டணம் அருகே அரசு பஸ் சென்றபோது, அங்கு பஸ் நிறுத்தத்தில் கூட்டாத்துப்பட்டி நோக்கி சென்ற தனியார் பஸ் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது, தற்காலிக டிரைவர் மணிகண்டன் ஓட்டிச்சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதனால், அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. தனியார் பஸ்சின் பின்பக்கம் லேசான சேதமானது.
4 பேர் காயம்
இந்த விபத்தில் அரசு பஸ்சின் தற்காலிக டிரைவர் மணிகண்டன் மற்றும் அதில் பயணித்த 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.
விபத்துக்குள்ளான 2 பஸ்களும் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் கொண்டுவரப்பட்டது. அரசு பஸ்சில் பணியாற்றும் தற்காலிக டிரைவர்கள் போதிய அனுபவம் இல்லாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருவதாக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story