பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பஸ்- ரெயில்களில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது
பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு மாணவ-மாணவிகள் புறப்பட்டு சென்றதால் நாகர்கோவிலில் இருந்து சென்ற பஸ், ரெயில்களில் மாணவ-மாணவிகள் கூட்டம் நேற்று அலைமோதியது.
நாகர்கோவில்,
வெளியூர்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் நாகர்கோவிலில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விடுதிகளில் தங்கி படிக்கிறார்கள். வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் தங்களது ஊர்களுக்கு மாணவ-மாணவிகள் செல்கிறார்கள்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மாணவ-மாணவிகள் நேற்று மாலை பஸ் நிலையங்களில் திரண்டனர். இதனால் நாகர்கோவில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
ரெயிலில் கூட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால் நேற்று குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக ஊருக்கு செல்வதற்கு பஸ் கிடைக்குமோ? கிடைக்காதோ? என்று எண்ணத்தில் வெளியூருக்கு சென்ற பஸ்களில் மாணவ-மாணவிகள் வேகமாக ஏறினார்கள். இதனால் கூட்ட நெரிசலில் சிலர் சிக்கினார்கள். வெளியூர்களுக்கு சென்ற பெரும்பாலான பஸ்களில் மாணவ- மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதே போல் நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரெயில்களிலும் மாணவ- மாணவிகள் கூட்டம் அலைமோதியது.

Related Tags :
Next Story