திண்டுக்கல்லில் பரபரப்பு: ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக முகமது அனீபா கைது
ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக முகமது அனீபா கைது செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்,
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை வந்தார். அப்போது அவர் செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டுகள் வைத்ததாக, போலீஸ் பக்ருதீன் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் தென்காசியை சேர்ந்த முகமது அனீபாவை தேடி வந்தனர். இதற்கிடையே வத்தலக்குண்டு பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, கார்த்திகேயனை தாக்கியதாக, முகமது அனீபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
வாக்குவாதம்
அதன்படி, அவர் தினமும் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் கையெழுத்து போடுவதற்காக முகமது அனீபா ஒரு காரிலும், அவருடைய ஆதரவாளர்கள் மோட்டார் சைக்கிள்களிலும் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
இதேபோல, சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (வயது 42), அவரது உறவினர் சண்முகம், நண்பர் திருமலை ஆகியோர் ஒரு காரில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். திண்டுக்கல் நீதிமன்ற பிரிவு அருகே வந்தபோது, முகமது அனீபா மற்றும் ஆதரவாளர்கள் வந்த வாகனங்களும், வேலுச்சாமி வந்த காரும் நேருக்கு நேர் மோதுவது போல வந்து நின்றது. இதனால் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய வேலுச்சாமிக்கும், முகமது அனீபாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
அப்போது, முகமது அனீபாவின் ஆதரவாளர்கள் வேலுச்சாமியை தாக்கினர். மேலும், அனீபாவின் காரில் வந்தவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதையடுத்து, வேலுச்சாமி தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முகமது அனீபா மற்றும் அவரது ஆதரவாளர்களான திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த யாசர் அராபத், வெள்ளை சேக் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் முகமது அனீபா நேற்று கைது செய்யப்பட்டு தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதனால் போலீஸ் நிலையம் மற்றும் திண்டுக்கல் நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர், திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு முருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முகமது அனீபா கைது செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story